• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டைகர் நாகேஷ்வரராவ் படத்திற்கு பிரம்மாண்டமாக அமைக்கப்படும் அரங்கம்

தெலுங்கு நடிகர்ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
தற்போது இப்படத்தின் பிரி புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது 1970 ம் வருடத்தில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை சித்தரிக்கும் வகையில் ரூ 7 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது.. 1970 களில் மிகவும் அறியப்பட்ட, ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்த பிரபல திருடனான டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கைச் சித்திரமே இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாநதி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய் போன்ற பல படங்களுக்கு பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா, 1970களில் ஸ்டூவர்ட்புரத்தை சித்தரிக்கும் அந்த பிரம்மாண்டமான செட் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். 7 கோடி மதிப்பிலான அந்த செட் ஷம்ஷாபாத் அருகே 5 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அகில இந்திய படமாக உருவாகவுள்ளது.

ஆர் மதி ஐ.எஸ்.சி ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளர். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்
எழுத்தாளர், இயக்குனர்: வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
பேனர்: அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால்
இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா
வசனங்கள்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
DOP: ஆர் மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
PRO: யுவராஜ்