புதுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புமிக்க நார்த்தாமலை தேரோட்ட நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடந்தேறின. இன்று மதியம் 4.00 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கிராமத்திற்கு வருகை புரிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் தேரின் முன்பு கடவுளை வழிபட்டு தேங்காய் உடைத்து வடம்பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்ற தேர்த்திருவிழா கோயில் வாசலிலிருந்து புறப்பட்ட தேர், தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதியாக வலம் வந்து மீண்டும் தேர் ஆலய வாசலில் நிலை நிறுத்தப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு அறங்காவலர் துறை சார்பாக, சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயத்தை சுற்றி இன்று ஒரே நாளில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக 800 போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் கீரனூர் திருக்கோகரணம் இலுப்பூர் அன்னவாசல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டனர்.
மேலும், பாதுகாப்பு பணியில் குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் 150 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டன இன்று நாள் முழுவதும் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி பன்னீர் காவடி பறவை உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பான ஆலயமாக கருதப்படும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று மாவட்டதிற்க்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று மதியம் 3 மணி அளவில் துவங்கிய தேர் திருவிழா மாலை 6:00 மணி அளவில் கோவில் வாசலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. மேலும், ஆலயத்தின் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தாரை தப்பட்டைகள் முழங்க விழா சிறப்பாக நடைபெற்றது. அண்டை மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.