

திருமங்கலத்தில், ரஜினி கோவிலில் 50 கிலோ எடை கொண்ட ரஜினி உருவ கருங்கல் சிலைக்கும், சிவன் வடிவில் உள்ள ரஜினி முழு உருவப்படத்திற்கும், மஹா சிவராத்திரி தினத்தை ஒட்டி, 3 கால பூஜை, சிறப்பு அபிஷேகம் , ரஜினியை குல தெய்வமாக வழிபடும் ரசிகர் தொடர் வழிபாடு…
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் கார்த்திக் (45) என்பவர், கடந்த பல வருடங்களாக ரஜினியை கடவுளாகவும், தனது குருவாகவும் எண்ணி, வாடகை வீட்டில் ஒரு முழு அறையை ரஜினியின் கோவிலுக்காக ஒதுக்கப்பட்டு , அந்த அறை முழுவதும் ரஜினி நடித்த படங்களுடைய முழு உருவ படங்களை ஒட்டியபடியும், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, ரஜினிக்கு 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால்செய்யப்பட்ட ரஜினி முழு உருவத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தியதுடன், இன்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு , அவரது முழு உருவப்படத்திற்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் , இளநீர் , தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தி வழிபட்டதுடன் , இரவு முழுவதும் தொடர் வழிபாடு நடத்தி , மூன்று கால பூஜைகள் நடத்த உள்ளதாகவும், தனக்கும் , தங்களது குடும்பத்தினருக்கும் கடவுளாக ரஜினி தோன்றுவதாகவும் , அவரை குலதெய்வமாக வழிபட்டு சிவராத்திரி தினத்தை முன்னிட்டு , அவரை வழிபட்டு வருவதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது குலதெய்வத்தை மகா சிவராத்திரி தினத்தை ஒட்டி குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவது போல், கார்த்திக் என்பவர் ரஜினியை குலதெய்வமாக வழிபட்டு வரும் சம்பவம் வினோதமாக கூறப்படுகிறது.


