• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன்

ByKalamegam Viswanathan

Oct 16, 2024

தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை வில்லாபுரம் கற்பகநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் அப்பள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்.

நேற்று இரவு வீட்டில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபமடைந்த கார்த்திக் தனது தந்தை லோகநாதனை கழுத்து அறுத்துக் கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து கார்த்திக்கிடம் விசாரணை செய்து வருகின்றனர்.