விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி இந்திரா நகரில் 4 தெருக்களிலும் சாக்கடை கழிவுநீர் வாய்காலில் செல்லாமல் தெருக்கள் முழுவதும் நாள் கணக்கில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று காரணமாக குடியிருப்பு வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கழிவுநீர் தெருக்களில் தேங்காமல் வாய்காலில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.