விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்ல கொண்டான் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இராஜபாளையம் புல்லுக்கடை தெருவில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளிகளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரிய துணைத் தலைவரும் திமுக விருதுநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளரும் இராசா அருண்மொழி ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கி மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் முன்னாள் யூனியன் சேர்மன் சிங்கராஜ் சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணி மற்றும் திமுக கிளை கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தொண்டர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.









