• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் காலமானார்

Byமதி

Nov 18, 2021

சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் கோவி. மணிசேகரன் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார்.

1992 இல் கோவி.மணிசேகரன் அவர்கள் எழுதிய வரலாற்றுப் புதினமான “குற்றாலக் குறவஞ்சி” தமிழுக்கான சாகித்திய அகாடெமி விருது பெற்றவர். வேலூரில் பிறந்த 95 வயதான மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இருந்தார்.

இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன.

இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரிடம் 21 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்ஷே விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.