• Thu. May 2nd, 2024

கன்னியாகுமரி காவல்நிலையத்தில் சுற்றுலா பயணிகள் உடன் இணைந்து காவல்துறை கொண்டாடிய இந்தியாவின் 75-வது குடியரசு தினம்.

இந்தியாவின் தென் எல்லை கன்னியாகுமரியில் உள்ள காவல் நிலையத்தில், இந்திய குடியரசின் 75_வது ஆண்டு கொண்டாட்டத்தில் கன்னியாகுமரி காவல் நிலையத்தின் ஆய்வாளர் நெப்போலியன்,துணை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி முன்னிலையில், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் அருட்பணி பங்கு தந்தை உபால்ட் வாழ்த்துறையுடன். காவல் துறையில் 31 ஆண்டுகளாக பணியாற்றி எதிர் வரும் ( டிசம்பர்-31) காவல் துறையில் இருந்து பணி ஓய்வு பெறவிருக்கிற. சிறப்பு உதவி ஆய்வாளர் பீர்முகம்மது இந்திய தேசிய மூவர்ண கொடியை இயற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் குமரிக்கு இன்று வந்துள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கலந்து கொண்ட குடியரசு நிகழ்வில், கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொது மக்களுடன். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி உறுப்பினர் இக்பால் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பணி ஆற்றும் ஆண், பெண் காவலர்களும் பங்கேற்றனர்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பணி ஆற்றும் அனைத்து நிலை பணியாளர்கள் சார்பில் விழா வாழ்த்துகளை உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.விழாவில் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *