• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போதை ஒழிப்பு விழிப்புணர்வை வழங்கிய ஆய்வாளர்..,

ByKalamegam Viswanathan

Jul 22, 2025

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் வழங்கினார்.

இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு செல்ல வேண்டும் என்பதனை பற்றியும் எவ்வாறு செல்லக்கூடாது என்பதனை பற்றியும் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார். பேருந்து பயணத்தின் பொழுது படிக்கட்டில் நின்று கொண்டு தூங்கிக்கொண்டு சென்றால் ஏற்படக்கூடிய விபரீதம் பற்றியும், அதன் பின்னர் அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை பற்றியும் உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து மாணவர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஒழுக்கமாக கவனமாக செல்வோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை செல்வம் கரிமேடு போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் சந்தானகுமார் மற்றும் ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.