• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அழகர் மண்டகப்படிகளில் நிறுத்தாமல் சென்றதே உயிரிழப்பிற்கு காரணம்!

Byகுமார்

Apr 18, 2022

கடந்த ஏப்ரல் 16ம் தேதி அதிகாலை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை தல்லாகுளம் பகுதியில் மண்டகப்படி தாரர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ‘பாரம்பரியமாக மரியாதை நிமித்தமாக கள்ளழகர் எழுந்தருள மண்டகபடியில் அமைத்து வருகின்றோம். இந்நிலையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலை சுற்றியுள்ள 69 மண்டகபடியில் திட்டமிட்டு கோயில் நிர்வாகம் கள்ளழகரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். தலா ஒரு மண்டகபடிக்கு 3 சேவையாக 9,800ரூபாய்க்கு ரசீது போட்டுள்ள நிலையில், கூடுதலாக அதிகாரி பணம் வசூல் செய்தனர். இருந்த போதிலும் மண்டகபடிகளில் சாமி நிற்க வில்லை. மேலும் சீர்பாதம் சுமபவர்களும் பணம் கேட்டு மிரட்டினர், அவர்களும் மண்டகபடியில் நிறக்காமல் தூக்கி செல்கின்றனர்.

மேலும் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியில் காவல்துறையினர் முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை. இதுகுறித்து கோயில் நிர்வாகம் எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை. இதுகுறித்து நீதி மன்றத்தை நாட உள்ளோம். நிர்வாகம் திறன் இல்லாமையை தான் காண்பிக்கிறது. உயிரிழப்பு ஏற்பட்டதும் மண்டகபடிகளில் நிறுத்தாமல் சென்றதுதான் கூட்ட நேரிசலுக்கு காரணம்.’ என்றனர்.