• Tue. Dec 10th, 2024

உச்சம் தொட்ட பூக்களின் விலை..!

Byவிஷா

Sep 7, 2022
ஓணம் பண்டிகை அதைத் தொடர்ந்து வரும் முகூர்த்த தினம் என தொடர்ந்து பெய்து வரும் மழை ஆகியவற்றால் தென்மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகின்றன. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3000யை தொட்டுள்ளது.
முகூர்த்த தினம், விழாக்காலங்களில் பொதுவாக பூக்களின் விலை அதிகரிக்கும். மேலும் வரத்து குறைந்து தேவை அதிகரித்தாலும் பூக்களின் விலை என்பது எகிறும். தற்போது விநாயகர் சதுர்த்தி, ஓணம், தொடர்ந்து வரும் முகூர்த்த தினம் உள்ளிட்டவை ஒருசேர வந்துள்ளன. இதனால் பூக்களின் விலை கடந்த ஒருவாரமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது ஓணம், முகூர்த்த தினம் மற்றும் கனமழையின் காரணமாக மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. இதற்கு மழையின் அளவு அதிகரித்து, தொடர்ந்து வரும் முகூர்த்த தினங்கள் தான் காரணமாக உள்ளன. அதன்படி நாளையில் இருந்து 3 நாட்கள் இன்னும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளன. அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி ரூ.1,800க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று உச்சம் தொட்டுள்ளது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.3000யை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒப்பிடும்போது இது ரூ.1,2000 அதிகமாகும்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ரூ.50க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.250க்கும், ரூ.30க்கு விற்பனையான அரளி பூ ரூ.250க்கும், ரூ.300க்கு விற்பனையான பிச்சி, முல்லை பூக்கள் தற்போது ரூ.1000க்கு விற்பனையாகின்ற. மேலும் ரூ.50க்கு விற்ற சம்மங்கி பூ என்பது தற்போது ரூ.250க்கு விற்பனையாகிறது. இதேபோல் பிற பூக்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளன.