• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மூவர்ண தேசியக் கொடியை குடியரசுத்தலைவர் ஏற்றினார்..!

Byவிஷா

Jan 26, 2024

இன்று 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் குடியரசுத்தலைவர் திரௌபதிமுர்மு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக, டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, அவரது மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) இருந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில் குடியரசு தினவிழா நடைபெறும் கடமை பாதைக்கு (கர்தவ்யா) அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் உடனிருந்தார். இதன்பின், ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் கடமைப்பாதைக்கு வருகை தந்தனர். அப்போது, தேசிய கொடியை ஏற்றுவதற்காக வருகை தந்த குடியரசு தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் நாட்டு அதிபரை பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, 75-ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு. 21 குண்டுகள் முழங்க டெல்லி கடமை பாதையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் குடியரசு தலைவர். இவ்விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதன்பின், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு ஏற்றார். இதைத்தொடர்ந்து, குடியரசு தினவிழாவையொட்டி கடமை பாதையில் முதன்முறையாக 100க்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள் இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தி வருகிறார். இந்தக் கலைஞர்கள் இசைக்கும் சங்கு, நாதஸ்வரம் போன்ற இசையுடன் அணிவகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.