• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கட்சி துணைத்தலைவர் பதவி… சீனியர்கள் ஓபிஎஸ் பக்கம் சாய வாய்ப்பு உண்டா…???

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் அக்கட்சியையே புரட்டி போட்டது என்றே சொல்லலாம். தோளோடு தோள் நின்ற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவேறு வழிகளில் பிரிந்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தன் வசம் நிறைய ஆதரவாளர்களை வைத்துக்கொண்டதுதான் பலமாகிவிட்டது. அது ஓபிஎஸ்-க்கு எதிராகிவிட்டது.

இதெல்லாம் போக, ஆண்டாண்டு காலமாக அடை காத்து வைத்திருந்த அதிமுகவின் கெத்து, பதிவி ஆசையால் பறிபோய்விட்டதோ என்பது பலரது கேள்வி. எனினும் எடப்பாடியும் சலைத்தவர் இல்லை. இவர் பின்னால் நிற்கும் அனைத்து ஆதரவாளர்களும் ஒருமித்த கருத்தோடு ஒத்துபோகவே தற்போது இடைக்கால பெதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதிவி ஏற்றுள்ளார். ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரணமே ஆறாத நிலையில் அவருக்கு மற்றொரு தலைவலியை உண்டாக்கிவிட்டார் இபிஎஸ். கட்சியின் துணைத் தலைவராக ஓபிஎஸ் இருந்த இடத்தில் தற்போது ஆர்.பி.உதயகுமாரை நியமித்து அதிர்ச்சியளித்துள்ளார்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியானது.

கேள்வி என்னவென்றால் கட்சியில் பெரிய தலைகள் பலர் இருக்க இபிஎஸ் ஏன் உதயகுமாரை அந்த பொறுப்பில் அமரவைத்தார். இது அவரை காப்பாற்றுவதற்கான அடித்தளமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று சிந்தித்து வருகின்றனர்.கட்சியின் சீனியர்களான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி இருக்க ஜூனியரான ஆர்.பி.உதயகுமாருக்கு இப்பதவி கொடுத்திருப்பது எந்த வகையில் சாத்தியம் என்ற எண்ணம் எழுகிறது.

தற்போது கட்சியின் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் அமைச்சராக பதவி வகித்தபோது செய்த முறைகேடுகள் எல்லாம் வெட்ட வெளிச்சமானது. அதுபோக சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இவர் எடப்பாடிக்கு சாதகமாக கூவிய கூவல் எல்லா மீடியாக்களிலும் படமாக்கப்பட்டது. அதன் எதிரொலியாக இப்போது கட்சியில் உயரமாக டென்ட் போட்டு உட்கார்ந்துவிட்டார் உதயகுமார். இதனால் மனதளவில் குமுறுவது என்னவோ சீனியர்கள் தான். இந்த நிகழ்வால் எடப்பாடி தரப்பிலிருந்து சிலர் பிரிந்து ஓபிஎஸ் பக்கம் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதை மறந்துவிட்டாரோ இபிஎஸ். எது எப்படியோ… நடக்கும் நிகழ்வை பொறுத்திருந்து பார்ப்போம்.