சாலையை கடந்து சென்ற நபரை தாக்கிய காவலர். கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சின்ன வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவர். பணியாற்றும் நிறுவனத்திற்கு பொருள்கள் வாங்குவதற்காக நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்பொழுது அந்த சாலை வழியாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் செயப்பிரகாஷ் என்பவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். இதனை இதனைக் கண்ட மோகன்ராஜ் உடனடியாக சாலையின் நடுவே நின்று கொண்டார். அப்பொழுது காவலர் ஜெயபிரகாஷ் மோகன்ராஜ் கன்னத்தில் திடீரென அறைந்து விட்டு சென்று உள்ளார். அந்த வீடியோ அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சாலையில் நடந்து சென்ற நபரை அதிவேகமாக சென்ற காவலர் கன்னத்தில் அறைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி மகிழ்ந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறையும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.








