கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் மயானத்தை மூடக் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை, கோவை புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பு இருந்து பயன்படுத்தப்பட்டு வந்த மயானத்தை தற்பொழுது அங்கு கால பைரவர் சிலை அமைப்பு உடல்களை இந்துக்கள் வழிபட்டு, சடங்கு செய்து அடக்கம் செய்து வந்தனர். இதனால் யார் இந்த கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதனை பூட்டி சாவியை கொடுக்குமாறு கூறி உள்ளனர்.
இதனை அறிந்த குளத்து பாளையம், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. குனியமுத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.