• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்:

Byஜெ.துரை

Feb 1, 2023

சென்னை கேகே நகர் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சுற்றித்திரிந்தார் அவரை கேகே நகர் ஆர் 7 காவல் ஆய்வாளர் உத்தரவின் படி அந்த பெண்மணி பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அதன் பின்னர் கருணை உள்ளம் என்ற தனியார் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு பேசிய கே.கே.நகர் காவல் ஆய்வாளர்.மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக வைத்து சிகிச்சை அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

அதன் பின்னர் காவல் நிலையம் வந்த தனியார் அறக்கட்டளையினர் அந்த பெண்மணியை காவல் நிலையத்தில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றதுடன் இந்த மனிதாபிமான செயலை செய்த காவல் ஆய்வாளருக்கு நன்றியையும் தெரிவித்தனர்.