சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களின் ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
பிபிஎம் துறையின் சார்பில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும். தொழில் முறை மற்றும் பயிற்சிமுறை பற்றியும் ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை கருத்தரங்கங்கத்தில் கல்லுரியின் தாளாளர் அசோக் குமார் முந்த்ரா, கல்லூரியின் முதல்வர் சந்தோஷ் பாபு , டாக்டர் சங்கீதா, ஆகியோர் தலைமையில் நடை பெற்றது இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஜெயராமன்,கௌரி சங்கர், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.