இசைஞானி இளையராஜாவிடம் ஓட்டுனராக பணிபுரிந்த திருப்பதிராஜ் தனது இடிந்த வீட்டை கட்ட முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உலகத்தையே உலுக்கிய கொரோனாவால் பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
திரைத்துறையில் பணியாற்றிய சினிமா கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல் அன்றாட கூலிக்கு வேலை பார்த்த எத்தனையோ தொழிலாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தும், சரியான உதவி கிடைக்காமல் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பாண்டி, ’மாயாண்டி குடும்பத்தார்’, ’கோரிப்பாளையம்’, ’முத்துக்கு முத்தாக’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராசு மதுரவன் புற்றுநோயால் உயிரிழந்தார். அவருக்கு திருமணம் ஆகி பவானி என்று மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
தலைசிறந்த படைப்புகளை கொடுத்த தன் கணவர் இறந்த பிறகு, அவரது மனைவி பவானி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ யாரும் முன் வரவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் தான் பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் தங்களது குடும்ப செலவையும் இரண்டு பெண் பிள்ளைகளின் படிப்பைப் கவனித்து வருவதாக மேற்கோள் காட்டி, தமிழ் சினிமா துறவினருக்கும் அரசாங்கத்திற்கும் உதவினாடி கோரிக்கை முன் வைத்திருந்தார்.
இப்படி சினிமா துறையை சார்ந்த பல தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், இசைஞானி இளையராஜா, நடிகர் விவேக், பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே செல்வமணி, இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி உதயகுமார், நடிகர் மயில்சாமி ஆகியோரிடம் கார் ஓட்டுநராக ஆற்றிய திருப்பதிராஜ் என்ற என்பவர் தன் அவலத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்களிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியவர் திருப்பதி ராஜ். இவர் கொரோனா காலகட்டத்தில் தன் வேலை வாய்ப்பு இழந்ததால், குடும்பத்தோடு சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்திற்கு சென்று விட்டார். அந்த கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் இருந்து கொண்டு, அங்குள்ள சிறு குறு தொழில்களை செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், திருப்பதி ராஜின் மண் வீடு முற்றிலுமாக சேதம் அடைந்திருக்கிறது. இந்த மழை வெள்ள பாதிப்பால் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் திருப்பதி ராஜ், தான் பணியாற்றிய சினிமா துறையினரிடம் உதவி வேண்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், நான் தமிழ் சினிமாவில் ஆர்.கே செல்வமணி, ஆர்.பி உதயகுமார், நடிகர் விவேக், மயில்சாமி, இசைஞானி இளையராஜா, போன்றவர்களிடம் ஓட்டுனராக பணியாற்றியிருக்கிறேன்.
சமீபத்தில் பெய்த கனமழையால் எனது வீடு முற்றிலுமாக சேதம் அடைந்திருக்கிறது. வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீட்டை சீர்படுத்தும் வேலைகளை செய்ய முடியாததால் சினிமா துறையை சேர்ந்தவர்கள், உதவும் நல்லெண்ணம் உள்ளவர்கள் தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.