• Sun. Sep 8th, 2024

விமானம் கடலில் விழுந்து
நொறுங்கி 2 பெண்கள் பலி

அமெரிக்காவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. புளோரிடாவின் வெனிஸ் நகரை நோக்கி சென்ற இந்த விமானத்தில் ஆண் விமானி ஒருவரும், 2 பெண் பயணிகளும் இருந்தனர். இந்த நிலையில் விமானம் வெனிஸ் நகரை நெருங்கியபோது திடீரென மாயமானது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்கிடையில் வெனிஸ் நகருக்கு அருகே கடலில் சென்றுகொண்டிருந்த படகோட்டிகள் சிலர் கடலில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதை கண்டனர். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டனர். பின்னர் அந்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்து மேலும் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டார். இதை தொடர்ந்து, மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதும், இதில் பெண் பயணிகள் இருவரும் பலியானதும் தெரியவந்தது. இந்த விபத்தில் விமானி மாயமாகியுள்ளார். அவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *