• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய செல்லப்பிராணி

Byகாயத்ரி

Jan 7, 2022

மலையேற்றம் சென்றப்போது கீழே விழுந்து உயிருக்கு போராடியவரை அவருடைய செல்லப்பிராணியான நாய் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரோவேஷியா நாட்டில் நண்பர்கள் சிலர் ஒரு குழுவாக மலை ஏற்றத்திற்கு சென்றுள்ளனர். இதில், Grga Brkic என்ற நபர் மட்டும் வழி தவறி தனது நண்பர்களை பிரிந்து வேறு பாதையில் சென்றுள்ளார். இதனை அறிந்த அவருடன் சென்ற மற்ற நண்பர்கள் தனது நண்பரை காணவில்லை என்று மீட்பு குழுவினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் 30 பேர், Grga Brkic-ஐ தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது மலையில் ஒரு இடத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்பதை மட்டும் கண்டுபிடித்தனர்.

அதன்பின்னர் அவர் கீழே விழுந்ததாக கருதப்படும் இடத்தில் தேடும் பணியை முடுக்கிவிட்டனர். அதன்படி நீண்ட தேடுதலுக்கு பிறகு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,800 மீட்டர் உயரத்தில் உள்ள மலை பகுதியில் அவரை கண்டுபிடித்துள்ளனர். அவர் அதற்கும் மேல் மலையேற்றம் சென்றம் அங்கிருந்து கீழே விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.Grga Brkic விழுந்த இடத்தில் கடும் குளிர் நிலவி வந்ததால் அவருடைய உயிருக்கே ஆபத்து என்ற சூழல் உருவானது. ஆனால் அந்த சமயம் அவருடைய செல்ல நாய் அவர் உடல் மீது சுருண்டு படுத்திருந்ததால் உஷ்ணம் ஏற்பட்டு Grga Brkic உயிர் பிழைத்துள்ளார் என்று மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்புகுழுவுக்கு முன்பே நாய் அங்கு சென்று அவரை காப்பாற்றியது.