பழனி அருகே புல்லட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்து ஜிம் மாஸ்டர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரப்பட்டி, R.R.மில் அருகே புல்லட் வாகனத்தில் வந்த பழனியில் ஜிம் நடத்தி வரும் ஜிம் மாஸ்டர் நிரேஷ் என்பவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நிரேஷ்- ஐ மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி நிரேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேற்படி சம்பவம் குறித்து பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










