• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாத்து வைத்தவர் தண்ணீரில் சிக்கி பலி

ByKalamegam Viswanathan

Sep 25, 2024

மதுரை திருப்பரங்குன்றம், லிங்கவாடி அய்யானார் புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியகருப்பன்(36). வாத்து மேய்த்து வியாபாரியான இவர், கூத்தியார்
குண்டு கண்மாயில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, வாத்துகள் அதிக ஆழம் உள்ள பகுதியில் இறங்கியது. அதை கரைக்கு கொண்டு வருவதற்காக அவர் தண்ணிக்குள் இறங்கினார். ஆழம் அதிகமாக இருந்ததால், திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

அக்கம் பக்கத்தினர் மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிறைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் . சம்பவம் குறித்து, மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை உடற்கு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு, திருமணம் ஆகி பாண்டீஸ்வரி எனும் மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. வாத்து மேய்க்கும் நபர் கண்மாயில் மூழ்கியது. அப்பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.