• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனித்து குதித்துள்ளது மக்கள் நீதி மையம்..

Byகாயத்ரி

Jan 29, 2022

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து நின்று சரிக்கு சரியாக போட்டியிட உள்ளது.தற்போது இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் 3-ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியலை மகிழ்வுடன் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்கியிருக்கிறது. எனவே தன் கட்சி சார்பாக களமிறங்கும் போட்டியாளரின் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று மூன்றாம் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்தது. இது பற்றி, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களுக்கான 3-ஆம் பட்டியலை மகிழ்வுடன் வெளியிட்டிருக்கிறேன். தூய்மை, நேர்மை, மற்றும் திறமை, உடைய இந்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்களின் தலைவர் கமல்ஹாசன் இதன் மூலமாக பிரச்சாரத்தை ஆரம்பித்திருப்பதாக கூறினர். வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மக்களை அவர் நேரில் சந்திக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள்.