• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானை வணங்க மட்டும்தான் தெரியும் ….அவருக்கு துரோகம் செய்ய மனசு வராது ..!

“திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை” என பகிரங்கமாக தெரிய வந்துள்ளது.

மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கியது அம்பலம் ஆகி உள்ளது.

தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என கண்டுபிடிப்பு.

வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திடம் 4 கன்டெய்னர் நெய்யை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளது.

வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட தமிழக மக்கள், ஆன்மீகஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையானை எங்களுக்கு வணங்க மட்டும்தான் தெரியும் அவருக்கு துரோகம் செய்ய தெரியாது என்று சொல்லி வருகின்றனர்.