காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட முதல் நாளே, பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறந்துள்ளது. பள்ளியின் முதல் நாள் என்பதால் மாணவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து மிகவும் உற்சாகமாக பள்ளிக்கு செல்கிறார்கள். இந்நிலையில் இன்று பள்ளிகள் திறந்த நிலையில் முதல் நாளே தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் திருத்திய மதிப்பெண்களை கேள்விகளுடன் TNSED இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி விடைத்தாள்களை திருத்திய பிறகு தொகுத்தறி மதிப்பெண்களை அக்டோபர் 9-ம் தேதிக்குள் அந்த செயலியில் பதிவேற்றம் செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்திய விடைத்தாள்களை மாணவர்களிடம் இன்றே ஒப்படைக்க வேண்டும் எனவும், இரண்டாம் பருவத்திற்கு உரிய புத்தகங்களையும் இன்றைய தினம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.







; ?>)
; ?>)
; ?>)