• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.

ByA.Tamilselvan

May 20, 2022

ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர தலைவர் அய்யாவு பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் நகராட்சி தேர்தலில் நம்மை வெற்றி பெற வைத்த மக்களுக்காக
இந்த மண்ணை தொட்டு கும்பிட்டால் ஒவ்வொரு வீட்டையும் தொட்டு கும்பிடுவதை போன்று , ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கும்பிட முடியாது.நாம் நல்ல பிள்ளையாக நடந்தால் தான் அடுத்து எம.பி தேர்தலில் வெற்று பெறமுடியும். இன்னும் 20 ஆண்டுகள் வரை முக ஸ்டாலின்தான் முதல்வர்.
திமுக வை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை. முதலில் நீங்கள் சேர்ந்து கொண்டு சண்டை க்கு வாருங்கள் என அதிமுகவை விமர்சித்தார்.கலைஞருக்கு பின்பு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் கஷ்டப்பட்டுதான் மேலே வருகிறார்கள்.கடந்த 10 வருடம் கேடு கெட்ட ஆட்சி நடைபெற்றது. நமது ஆட்சி நல்ல ஆட்சி நல்ல முதல்வர்.
ஒரு அண்ணனாக, தகப்பனாக குடும்பத்தின் தலைவராக ஸ்டாலின் உள்ளார்.அதிமுக கஜானா வை சுரண்டி விட்டார்கள். திமுக வந்து பார்த்த உடன் கஜானாவில் ஒன்றும் இல்லை. வெறும் பெட்டி 1 ரூபாய் காசு கூட இல்லை. பெட்டியை திறந்தால் கடன் பேப்பர் மட்டுமே உள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்குதான் யோகம் , எங்க கையில் பணம் கொடுத்தால் பணம் வீடு சேராது என தெரிந்து தலைவர் பெண்களுக்கு பணம் கொடுத்து வருகிறார். எங்களிடம் பணம் கொடுத்தால் சாராய கடைக்குதான் செல்லும்.டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை, . மோடி முன்பு மாப்பிள்ளை போல் ஸ்டாலின் அமர்கிறார்.பாஜக பினாமி ஆட்சியாக அதிமுக வை நடத்தியது என அவர் தெரிவித்தார்.