• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலாப்பழம் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவாக பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

தேர்தல் தேதி நெருங்குவதையடுத்து பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து கூட்டணிக் கட்சிகளான பாஜக, அதிமுக உரிமை மீட்புக் குழு அமமுக, தமமுக நடிகர் சரத்குமார் ஆதரவாளர்கள் என கூட்டணி கட்சியினர் மகளிர் அணியினர் இணைந்து சாயல்குடி, நரிப்பையூர், தெற்கு நரிப்பையூர், வெள்ளப்பட்டி, வெட்டுக்காடு, திரவியபுரம், கன்னிராஜபுரம், செவல்பட்டி, தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திரளாக கலந்து கொண்ட பெண்கள் தங்கள் கைகளில் பலாப்பழம் சின்னம் பதித்த விளம்பர பதாகைகளை ஏந்தி வீடு தோறும் சென்று வாக்கு சேகரித்தனர்.