• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள் !!!..,

BySeenu

Oct 2, 2025

ஏடு துவங்குதல் எனப்படும்  வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதன் அடிப்படையில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் சுட்டி குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ, பிள்ளையார் சுழி, அம்மா, அப்பா என்று எழுத வைத்தனர்.

இன்றைய தினம் கல்வியைத் துவங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் கோவிலுக்கு பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர்.

பெற்றோர், குழந்தைகள் வருகையையொட்டி சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

மேலும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன்பதிவு செய்து உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.