• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்!..

By

Aug 18, 2021

தெலுங்கானா கவர்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான் கிருஷ்ணகுமாரி (76) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர் குமரி அனந்தன். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி என பன்முகத் திறன் கொண்டவர். இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவர் , அரசியல்வாதி என புகழ்பெற்ற நிலையில் தற்போது ஆளுநராக வலம்வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.