உசிலம்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-ன் 51வது பிறந்த நாளை முன்னிட்டு – தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்-ன் 51 வது பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தவெக தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசமரத்துப்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட், புக், பேனா மற்றும் 500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் மகாலிங்கம் தலைமையிலான தவெக நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகள், உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், செல்லம்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைவர் விஜய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.