• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அரசமரத்தில் உருவான அதிசய வெள்ள விநாயகர்..,

ByM.S.karthik

Jul 5, 2025

மதுரை மாநகர் அண்ணாநகர் சதாசிவநகர் நேதாஜி தெருவில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அதிசய வெள்ள விநாயகர் திருக்கோவில்.

இக்கோவிலில் உள்ள அரசமரத்தில் சுயம்புவாக உருவான அதிசய விநாயகர் உள்ளது. இந்த அதிசய அரசமர விநாயகர் கோயில் உருவாவதற்கு முன்பு சாதாரணமாக தரையில் இருந்த விநாயகர் மண் மேவி பூமியில் புதைந்து அதில் அரசமரம் முளைத்து அம்மரத்தில் சுயம்புவாக விநாயகர் தோன்றி அதை பொதுமக்கள் வழிபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

மேலும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிபொன்வசந்த் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அவர்க்கு தலைவர் முருகன் செயலாளர் நந்தா பொருளாளர் சங்கர்லால் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.