• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பிரதமர்-முதல்வர் இருவரையும் ஒப்பிட்டு கணக்கு போட்டு காட்டி வாக்கு சேகரித்த கூட்டுறவுத்துறை அமைச்சர்.

ByG.Suresh

Apr 15, 2024

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் பெரியகருப்பன் வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 410ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விற்பனை ஆனது. அதை குறைத்து தருவேன் என மோடி உத்திரவாதம் தந்தார். ஆனால் என்ன நடந்தது படிப்படியாக 800 ரூபாய் உயர்த்தி 1200 ரூபாய்க்கு கேஸ் விலை உயர்ந்துள்ளது. இதை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. கணக்கு போட்டு பார்த்தால் தலை சுத்துடும் என்று கூறி கிராம மக்களுக்கு ஏற்றவாறு கணக்குப் போட்டு சொன்னார். ஒரு சிலிண்டருக்கு 800 ஏத்துனா ஒரு வருடத்திற்கு 9 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவு ஆகுது. பெட்ரோல் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் போட்டா அம்பது ரூபா கூடுதல் செலவாகுது. 30 நாளைக்கு 1500 ரூபாய் கூடுதல் செலவாகுது. வருடத்துக்கு பார்த்தா 18000 கூடுதல் செலவு ஆகிறது, ஆக மொத்தம் 18000 + 9600 =27600 ஆண்டுதோறும் நம் குடும்பத்துக்கு சுமார் 28 ஆயிரம் நிதிச்சுமையை மோடி அரசு தூக்கி வைக்கிறார்.

ஆனால் நமது முதலமைச்சரே சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி மகளிர் இலவச பேருந்து பயணத்தில் மாதம் 900 ரூபாய் மிச்சபடுத்தி ஆண்டுக்கு 10800 ரூபாய் மிச்சமாவதாகவும் கலைஞர் உரிமைத்தொகை மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கி ஆண்டுக்கு 12000, இலவச பஸ் பயணம் மூலம் 10800 என சுமார் 23 ஆயிரம் ரூபாய் நிதி சுமையை முதல்வர் குறைத்துள்ளார் என்பதை கணக்கு போட்டு சுட்டி காட்டி, மோடி நமது தலையில் சுமையை ஏற்றுகிறார். மக்களின் கஷ்டங்களை உணர்ந்து சுமையை குறைக்க நல்ல தீர்வு காண்பவர் தான் நமது முதலமைச்சர்.
நல்ல நிர்வாகம், நல்ல அரசு, நல்ல முதலமைச்சர் என்று கூறி முதலமைச்சரின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மோடி மற்றும் எடப்பாடியின் அதிமுகவும் பாஜக வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்றார்.