• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மது போதையில் கோவில் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் கைது..!

Byவிஷா

Nov 10, 2023

சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர், சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போதையில் கோவில் மீது பேற்றில் குண்டு வீசியுள்ளார். இதனையடுத்து, முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் மது அருந்துவிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான குற்றவாளி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், தமிழகத்தில் இந்த குண்டு வீசும் கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி வந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்ததக்கது.