• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கார்-ல கீரல் போட்டதுக்கு பூனையை சுட்ட மனிதர்…இரக்கமே இல்லையா..??

Byகாயத்ரி

Apr 30, 2022

காரில் கீறல் போட்டதாக பக்கத்துவீட்டு பூனை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த நீந்தூரைச் சேர்ந்த தாமஸ், மோனிகா தம்பதியினர் வளர்த்துவந்த பூனை துப்பாக்கியால் சுடப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் காரில் பூனை கீறல் போட்டதாக கூறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பூனையின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என ஏட்டுமானூர் போலீசார் தெரிவித்தனர். பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு பூனையின் உடலில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது.