• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே…!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார்.

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, நரவனே முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார். ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ஒருவர் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார்.

நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான், நிக்கோபார் பிரிவு தளபதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.