• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செயலிழந்த மங்கள்யான்.. விண்ணில் விடைபெற்றது…

Byகாயத்ரி

Oct 3, 2022

பல நாடுகள் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பல பில்லியன்களை செலவு செய்து வரும் நிலையில் இஸ்ரோ ரூ.450 கோடியில் மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. 6 மாதங்கள் வரை ஆயுட்காலம் கொண்ட மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் சுமார் 8 ஆண்டுகளாக செயல்பட்டு பல தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது மங்கள்யான் செயலிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும், 1.40 மணி நேரம் மட்டுமே பேட்டரி செயல்படும் நிலையில் கிரகணங்கள் நீண்ட நேரம் நீடித்ததால் விண்கலம் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.