• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுபானக்கூடாக மாறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை

ByKalamegam Viswanathan

Jan 23, 2024
 மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில், இந்த தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் - ன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சம் செலவில், பயனற்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை, மதுபான கூடமாக மாறியது. 
நிழற்குடை உட்புறம் முழுவதும் மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கூளங்களாக காட்சி அளிப்பதால், அதன் அருகில் 50 பிஞ்சு குழந்தைகள் கல்வி பயிலும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. மிகுந்த வேதனை கூறியதாக உள்ளது. பயனற்ற இடத்தில் ரூபாய் 5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை வீணடிக்கப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரத்தில்,             அக்கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள் இந்த நிழற்குடையை மதுபான கூடமாக பயன்படுத்தி வருவதால், கிராமத்து பெண்கள் மற்றும் சிறுமிகள் அவ்வழியே செல்ல அச்சமடைந்துள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.