

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் மேலக் கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது. இதற்காக யாக கேள்வி பூஜை நேற்று காலை 5 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தொடங்கி, தொடர்ந்து கணபதி பூஜை கோ பூஜை நடைபெற்று மகா பூர்ணகக்ஷதியுடன் நேற்றைய யாகம் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை மூன்றாம் காலயாக பூஜைகள் நடைபெற்று நாளை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும். இதில் மேலக்கால் பன்னியான் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்துள்ளனர்.

