விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் முகவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள நியாய விலைக் கடையிலும் சேத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள மேட்டுப்பட்டி-1 நியாய விலைக்கடையிலும் வட்டாடட்சியர் ராஜூவ்காந்தி முன்னிலையில்
இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து இராஜபாளையம் நகராட்சி பகுதிகளான ஸ்ரீரெங்கபாளையம் செவல்பட்டி பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்கப்பாண்டியன் MLA மற்றும் இராஜபாளையம் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் வட்டார வழங்கல் அலுவலர் ஆனந்தராஜ் .1066 ஸ்டோர் மேலாளர் சரவணன் கூட்டுறவு சார்பதிவாளர் ஜெயலட்சுமி நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன் பாலசுப்பிரமணியன் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் சேத்தூர் பேரூர் நிர்வாகி சுந்தர் ஒன்றிய துணை செயலாளர் குமார் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் கிளைச்செயலாளர்கள் தொந்தியப்பன் ஆனந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




