கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான தூத்தூர் மீனவர் ராஜூ குடும்பத்திற்கு செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தனது செந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் (ரூ. 50000) வழங்கினார்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, 3-10-224, வட்டவிளாகம், தூத்தூர் என்ற முகவரியை சேர்ந்த ராஜூ, வயது : 46, த.பெ. அந்தோணி அடிமை என்பவர் உட்பட 10 மீனவர்கள் ஜெலஸ்டின் என்பவருக்கு சொந்தமான TN/15/MM/4861 என்ற பதிவு எண் கொண்ட EASRON என்ற விசைபடகில் கடந்த 04 -11 -2025 அன்று தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். கடந்த 9-11-2025 அன்று இரவு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்திலிருந்து தெற்காக சுமார் 513 – நாட்டிக்கல் தொலைவில் ஆள்கடலில் மீன்பிடித்து விட்டு விசைபடகில் தூங்கும் போது படுத்திருந்த ராஜூ தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையும் இணைந்து போர்கால அடிப்படையில் தேடுதல் பணிகளை தீவிரபடுத்தி விசைபடகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ராஜூ அவர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுக்கள் அளித்திருந்தார்.
மேலும் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ராஜூவின் வருமானத்தை நம்பி இருந்த இவரது மனைவி ஆரோக்கிய மேரி மற்றும் இரண்டு குழந்தைகளும் எவ்வித வருமானமும் இல்லாமலும், குழந்தைகளின் கல்விக்கும் எந்தவித வசதியும் இன்றி அவதிப்படுகிறார்கள் என்ற தகவல் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அவர்கள் கவனதிற்கு கொண்டு வரபட்டது.

இதனையடுத்து கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவர் ராஜூ குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு தனது செந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் (ரூ. 50000) நிதியுதவியை அவரது மனைவி ஆரோக்கிய மேரி யிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். மேலும் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறியதாவது விசைப்படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவர் ராஜூ குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அல்லது தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அப்போது தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெஸ்டின், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் கிளை தலைவர் சஜின் மற்றும் ஜெலஸ்டின், ஜோணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








