• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மற்ற கட்சிகள் உடனான கூட்டணி தலைமை முடிவு செய்யும்..,

ByKalamegam Viswanathan

Nov 28, 2025

காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியில் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் மதுரை தனக்கன்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சையது அஸ்மத்துல்லாஹ் ஹுசைனி கலந்து கொண்டார் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுரை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சையத் அஸ்மத்துல்லாஹ் உசைனி கூறுகையில்:

கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் நம்புகிறோம். கட்சிக்குள் தலைவர்களை நியமனம் செய்வதிலும் ஜனநாயக முறையில்தான் தேர்ந்தெடுக்கிறோம். குஜராத்திலும் அடிமட்ட தொண்டர்கள் முதல் அனைவரிடமும் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தான் தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். தலைவர்களை நியமனம் செய்வதற்கு கடை கோடியில் உள்ள தொண்டர்களிடமும் கருத்து கேட்கிறோம். அதை தொடர்ந்து தற்போது ஆந்திரா, தமிழ்நாடு, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் அதேபோல வெளிப்படையுடன், உண்மையாக கட்சிக்கு நேர்மையாக இருப்பவர்கள் முன்னதாக வந்து கட்சிக்கு வேலை செய்ய வேண்டும். அதனால் தான் எங்கள் தலைவர் ராகுல் காந்தி கட்சிக்கு உண்மையாக வேலை செய்பவர்களை வைத்து கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

மாவட்டம் வாரியாக, சட்டமன்றத் தொகுதி வாரியாக, பஞ்சாயத்து யூனியன் வாரியாக அடிமட்டத்திலிருந்து அனைவரிடமும் கருத்துகளை கேட்கிறோம் கட்சியை வலுப்படுத்த மட்டுமல்ல அந்தப் பகுதிகளில் உண்மை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்கு. அதற்காக மதுரை மற்றும் தேனி மாவட்டத்திற்கு அடுத்து பயணித்து இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளேன். அதன் பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை சந்தித்து அதன் பின்னர் கட்சிக்கு இது குறித்து அறிக்கை கொடுப்போம். எந்தவித பாகுபாடுகளும் இன்றி கட்சியின் அடிமட்டம் முதல் மேல்மட்ட தலைவர்கள் வரை உண்மையான தலைவர்களை அறிந்து கொள்ள உதவும்.  

பீகார் தேர்தல் முடிவுகள் கட்சி உட்பட்ட அமைப்பில் ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு:

தேர்தல் முடிவுகள் அவ்வப்போது மாறும். மக்களின் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்ன தவறுகள் நடந்ததோ அதை திருத்துவது குறித்து தலைமை முடிவு செய்யும். கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இனிவரும் காலங்களில் வேட்பாளர் தேர்தலை எதிர்கொள்ளக்கூடாது கட்சி அந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் அந்த வழியில் தற்போது காங்கிரஸ் பயணிக்கிறது.

இந்தியா கூட்டணி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்த கேள்விக்கு:

எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது மத்திய மாநில அளவில் எங்களுக்குள் புரிதல்கள் நல்லபடியாக உள்ளது, எந்தவித சர்ச்சைகளும் இல்லை. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். தற்போது உள்ள கூட்டணி எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது குறிப்பாக தமிழக மக்கள் எங்கள் கூட்டணியுடன் இருக்கிறார்கள்.

வருகிற தேர்தலில் கூடுதலாக காங்கிரஸ் கட்சி இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு:

அதை கட்சி பார்த்துக் கொள்ளும் என்னுடைய பங்கு இந்த அமைப்பு சீரமைப்பு இயக்கத்தை பார்த்துக் கொள்வதுதான் எனக் கூறினார்.