• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்திற்கு கலங்கரை விளக்கமாக இருந்த தலைவர் எம்.ஜி.ஆர்.- இபிஎஸ் புகழாரம்

ByA.Tamilselvan

Jan 17, 2023

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவருடைய புகைப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று (ஜன. 17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தலைமை அலுவலகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும், பெருமையையும் போற்றி வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.