• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வளர்த்தவரையே அடித்து கொன்ற கங்காரு!!

ByA.Tamilselvan

Sep 14, 2022

ஆஸ்திரேலியாவின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் பீட்டர் எடஸ் (77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது, படுகாயங்களுடன் கிடந்த பீட்டரை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக போலீசார் மற்றும் மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் பீட்டருக்கு முதலுதவி செய்ய முயற்சித்தனர். ஆனால், மருத்துவக்குழுவை அவரது அருகே செல்ல விடாமல் தடுத்து தாக்க முயற்சித்தது.
இதையடுத்து, அந்த கங்காருவை போலீசார் சுட்டுக்கொன்றனர். பின்னர், பீட்டரை மீட்ட மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால், கங்காரு தாக்குதலில் படுகாயமடைந்த பீட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 86 ஆண்டுகளில் கங்காரு தாக்கி மனிதர் உயிரிழக்கும் சம்பவம் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 1936-ம் ஆண்டு காங்காரு தாக்கி ஒரு நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.