• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உள்ளம் தெளிவாக

ByMalathi kumanan

Nov 19, 2022
  1. உள்ளம் உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம் ஆனால் தோல்வி அடையாத மனிதர்களே உலகில் இல்லை தோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக் கொள்ள முடியும். உங்கள் உள்ளம் தோல்வியடையவில்லை. உங்கள் முயற்சி தான் தோல்வியடைந்தது என நினைத்துக் கொள்ளுங்கள் உள்ளம் தெளிவாகும்
  2. மூச்சை இழுத்து விடுவதும் ஒரு தியானம் தான் மெதுவாக மூச்சை இழுத்தபடி ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள். மீண்டும் 10 முதல் ஒன்று வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள். மன அமைதி இருக்கும். உள்ளம் தெளிவாகும்
  3. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் மனதுடன் பேசுங்கள் வாழ்க்கையில் எனக்கு என்ன தேவை என மனதுடன் மனதில் மனதுடன் கேளுங்கள் கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது
  4. புதிய காற்று சூரிய ஒளி தண்ணீர் உணவு குழந்தைகள் மலர்கள் சாக்லேட் வாழ்க்கை பாடங்கள் புத்தகம் செல்ல பிராணிகள் நடைப்பயிற்சி நடனம் பாடல் தூக்கம் இவையெல்லாம் உங்கள் மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள் இதையெல்லாம் செய்து வர உள்ளம் தெளிவாகும்