கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பாறை_சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற்பரப்பில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினஎடுத்த நடவடிக்கையால் ரூ.38_கோடி நிதி ஒதுக்கீட்டில் வான் தொடும் வள்ளுவர் சிலையை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நிறுவியதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக, கடலில் கட்டப்பட்ட கண்ணாடிப் பாலம் இன்று குமரியின் புதிய அடையாளமாக உலக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
கண்ணாடிப் பாலம் திறந்த நான்கு மாதங்களில். பலத்தில் வலு மூன்று முறை வெவ்வேறு கோணங்களில் சோதனை செய்யப்பட்ட நிலையில். பாலத்தில் கண்ணாடி பகுதியில் மிதி அடி அணிந்து நடக்கக்கூடாது. அமர்ந்து இருக்கக்கூடாது,படுத்து உருளக்கூடாது என பலவகை அறிவிப்பு சொல்லப்பட்டாலும்,

சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால். பணியில் இருக்கும் சுற்றுலா துறையின் பணியாளர்கள், காவல்துறையின் எண்ணிக் போதாது என்பதை இன்று (மே_20)கண்ணாடிப் பாலத்தில் வெகு நேரமாக கண்ணாடியின் மீது ஒரு பெரும் கூட்டம் வெகு நேரமாக உக்கார்ந்து இருப்பதை பார்த்தும் பணியில் இருக்கும் சுற்றுலா துறையின் ஊழியர்கள், காவல்துறை இந்த காட்சியை வேடிக்கை பார்ப்பதை போன்ற நிலையே தொடர்கின்றது.
குமரி ஆட்சியர் கண்ணாடிப் பாலம் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் நிலையில் கண்ணாடிப் பாலம் கண்காணிப்பு பணியில் இருப்பவர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வை துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பாலத்தில் நடக்கும் சுற்றுலா பயணிகளுக்கு பன் மொழியில் ஒலிபெருக்கியில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு மிக அவசியம் என்பதை சுற்றுலா பயணிகளின் அணுகுமுறை வெளிப்படுத்துகிறது.