மயிலாடுதுறையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் அமர்ந்து நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி:- மதபேதங்களை மறந்து ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.

மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்றனர்.
ஜமாத் நிர்வாகத் தலைவர் சபீர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ, மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ, மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ், பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஒரே மேடையில் அமர்ந்து இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, ரமலானின் மகத்துவம் மற்றும் தமிழகத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஒற்றுமையை குறித்து பேசினர். தொடர்ந்து, இப்தார் நோன்பு திறக்கப்பட்டது. பின்னர் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.