குமரியின் மைந்தன் மறைசாட்சி புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர். திருத்தந்தையின் தூதர் லீயோ போல்டேஜிரெல்லி
அறிவித்தார்.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான நட்டாலத்தில் பிறந்த
நீலகண்டன் என்னும் தேவசகாயம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிதி பரிபாலர் என்னும் முக்கியமான நிர்வாகியாக இருந்தவர். இறை இயேசுவின் பால் ஏற்பட்ட ஈர்ப்பால் கத்தோலிக்க கிறித்தவ சமயத்தில் அன்றைய நெல்லை மாவட்டத்தின் பகுதியான வடக்கன் குளத்தில் உள்ள தேவாலயத்தில் திருமுழுக்கு பெற்றார்.
மறைசாட்சி புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் என திருத்தந்தையின் தூதர் லீயோ போல்டேஜிரெல்லி ஆரல்வாய்மொழி மவுண்ட் பகுதியில் நடைபெற்ற பெருவிழாவில் முறைப்படி அறிவித்தார்.
புனிதர் மறைசாட்சி தேவசகாயம் இந்திய நாட்டின் பொதுநிலையரின் பாதுகாவலர் என திருத்தந்தை 14_ம் லீயோ கடந்த ஆண்டு ஜீலை மாதம் 16_ம் தேதி அறிவித்தார்.

திருத்தந்தையின் அறிவிப்பை தொடர்ந்து. தேவசகாயம் உயிர் நீத்த தேவசகாயம்
மவுண்ட் திருத்தலத்தில் நடைபெற்றது. இதில் திருத்தந்தையின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜிரெல்லி பங்கேற்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் அருட் கன்னியர்கள், அருட்பணியாளர்கள் மத்தியில்.இந்திய திரு அவையின் மக்களுக்கு புனித தேவசகாயம்.இந்திய பொதுநிலையரின் பாதுகாவலர் என லத்தின் மொழியில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்தனர். இந்த அறிவிப்பை வெளியிட்டதும்,அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கை ஒலியின் ஓசை அடங்க சில நிமிடங்கள் ஆனது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி, புதுச்சேரி_கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்டஸ், மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து,வாணாராசி மறைமாவட்ட ஆயர் யூஜின் ஜோசப், குமரி கேட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்டம் ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ், தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் லியோன் கென்சன், மற்றும் தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை
பணியாளர் அருட்பணி எம்.சி.ராஜன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மற்றும்
நோபாளம் பகுதிகளில் இருந்து ஆயர்கள், என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அனைத்து ஆயர்களுக்கும் உயர் மரியாதையாக. புனித தேவசகாயம் வடிவ சொரூபம், மறைநூல் ஜெபமாலை நினைவு பரிசாக வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், தமிழக அரசின் நிதித்துறை இணை அமைச்சராக இருந்த நாஞ்சில் வின்சென்ட் ஆகியோருக்கு நினைவு பரிசாக வேதாகமம், புனிதர் மறைசாட்சி தேவசகாயம் சொரூபம்,ஜெபமாலையை.குழித்துறை மறைமாவட்ட ஆயர்
ஆல்பர்ட் அனஸ்தாஸ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டது. கூடிக் கலைந்த மக்கள் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் லியோன் கென்சனின் திட்டமிட்ட முறையான ஏற்பாடுகள் விழாவின் சிறப்பான வெற்றிக்கு காரணம் என பாராட்டினார்கள்.