• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிக சம்பளம் வாங்கும் பாடகர் பாடகி

Byமதி

Dec 1, 2021

அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் என்றால் நம் அனைவருக்கும் யாரு என்று தெரியும். ஆனால் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகிகள் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். அதில் பாடகர்களில் அதிக சம்பளம் வாங்கும் பெருமையை கடந்த சில வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சித் ஸ்ரீராம்.
ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் சம்பளமாக பெறுகிறார்.

பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து பாடி வரும் இவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

இவருக்கு அடுத்த இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் பாடகி, சாதனா சர்கம். ஒரு பாடலுக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார்.