• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹேக்கிங் சர்ச்சை…ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது…

Byகாயத்ரி

Nov 24, 2021

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாஸஸ் மென்பொருள் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு உலகையே உலுக்கியது.

இதில் ஆண்டிராய்ட் மொபைல்கள் மட்டுமின்றி, ஆப்பிள் மொபைல் பயனாளிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், என்எஸ்ஓ நிறுவனம் மீது காலிபோர்னியா நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஸ்பைவேர் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற புதிய விவரங்களை தாக்கல் செய்து உள்ளதாகவும் அதி நவீன கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகளின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் பயனாளிகள் ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்எஸ்ஓ நிறுவனத்தின் மென்பொருட்களை முழுமையாக தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.