பயணியை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு நடத்தினர்-பொதுமக்கள் வீடியோ எடுத்ததை கண்டதும் ஓடி வந்து மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்…
கோவை சிங்காநல்லூரில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லக்கூடிய மதுரை உட்பட்ட அரசு பேருந்து மாலை 6.30 மணியளவில் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு வந்த போது பயணியர் ஒருவர் வே.கள்ளிப்பாளையத்தில் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார்.

அங்கெல்லாம் பேருந்து நிற்காது என்று நடத்துனர் அந்த பயணியை கீழே இறக்கி விட்டு விட்டார்.
அதே பகுதியை சேர்ந்த நபர் இதை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
இதைக் கண்ட நடத்துனர் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி ஓடி வந்து செல்போனில் வீடியோ எடுத்த நபரிடம் மன்னிப்பு கேட்டு தெரியாமல் இறக்கி விட்டு விட்டதாகவும் இனி இது போல் நடக்காது என மன்னிப்பு கேட்டு கதறும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் வே.கள்ளிப்பாளையம் என்ற ஊரில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என விதிகள் இருந்தாலும் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை பேருந்தில் ஏற்றாமல் செல்வதாகவும் இதனால் பணிக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்வோரும் பாதிப்படைவதாகவும், வீடியோ காட்சிகளில் வரும் நடத்துனர் &ஓட்டுநர் மீது தமிழ்நாடு குடிமைப்பொருள் மற்றும் மேல்முறையீட்டு ஒழுங்கு நடவடிக்கை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மதுரை போக்குவரத்து கழக பணி மேலாளருக்கு அப்பகுதி மக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.